யாழ் போதனாவில் வைத்திய நிபுணர் ஒருவர் திடீர் இடமாற்றம்
Categories :
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து திடீரென வைத்திய நிபுணர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பல் முகம் சீராக்கல் பிரிவின் (Orthodontic) விசேட வைத்திய நிபுணர் திடீரென மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை தெரிவிக்கையில்,
சுகாதார பணிப்பாளர் நாயகம் அவர்களின் உத்தரவுக்கமையவே மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
The post யாழ் போதனாவில் வைத்திய நிபுணர் ஒருவர் திடீர் இடமாற்றம் appeared first on Ra Tamil.