யாழ் நெல்லியடியில் கையெழுத்துப் போராட்டம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று காலை நெல்லியடி பொதுச் சந்தை முன்பாக போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வே.வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
இப்போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் புதிய அரசின் நீதி அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன் அரசியல் கைதிகள் யாரும் சிறைகளில் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்ததாகவும், இது அப்பட்டமான பொய் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் அனுரகுமார திஸநாயக்க வவுனியாவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளை எமது ஆட்சியில் விடுவிப்போம் என தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
The post யாழ் நெல்லியடியில் கையெழுத்துப் போராட்டம் appeared first on Ra Tamil.