மதுபான பாவனை – 20,000 உயிரிழப்புகள் பதிவு
மதுபான பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் காரணமாக நாட்டில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் உறுப்பினர் அநுலா விஜேசுந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய மதுபான போத்தல்களைத் தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மதுபானம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதொன்று என்பதனை சகலரும் அறிவார்கள்.
இந்தநிலையில் அவ்வாறான புதிய கொள்கைகள் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படுமாயின் கசிப்பு உள்ளிட்டவற்றின் பாவனை அதிகரிக்கக்கூடும்.
அதேநேரம் இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் மதுபான பாவனை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
எனவே, மதுபானத்தின் தரம் தொடர்பில் மதுவரி ஆணையாளர் தெரிவித்த கருத்தை வன்மையாக எதிர்ப்பதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் அநுலா விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
The post மதுபான பாவனை – 20,000 உயிரிழப்புகள் பதிவு appeared first on Ra Tamil.