யாழில் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்


Categories :

யாழ்.பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

The post யாழில் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள் appeared first on Ra Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *