Day: November 27, 2024

சீரற்ற காலநிலை – வடக்கில் ஒரு லட்சம் பேர் பாதிப்புசீரற்ற காலநிலை – வடக்கில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 25 ஆயிரம் வரையான குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் வரையில் பாதிப்படைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இரணைமடு, முத்தையன்கட்டு போன்ற குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் [...]

அனுரவின் அனுமதி – தயார் நிலையில் தமிழர் தாயகம்அனுரவின் அனுமதி – தயார் நிலையில் தமிழர் தாயகம்

போரில் உயிரிழந்த தமது உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவுகூர எவ்வித தடைகளையும் அரசு ஏற்படுத்தாது என்றும், தடைகளை ஏற்படுத்த அரசுக்கு அனுமதியும் இல்லை என்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக மாவீரர்களை நினைவேந்தி [...]

கிழக்கு பல்கலைக்கழக விடுதிகள் மூடப்பட்டனகிழக்கு பல்கலைக்கழக விடுதிகள் மூடப்பட்டன

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள் புதன்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டு மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் அமரசிங்கம் பகிரதன் தெரிவித்தார். மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் [...]

கொழும்பு-யாழ் வீதியின் போக்குவரத்து பாதிப்புகொழும்பு-யாழ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த [...]

அனர்த்த நிலைமையை தமிழில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்அனர்த்த நிலைமையை தமிழில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தகவல் தெரிவிக்க அல்லது உதவி பெற தமிழ் பேசும் மக்களுக்காக பிரத்தியேகமான 107 என்ற தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மேற்படி, இலக்கத்தின் ஊடாக சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவசரகால சூழ்நிலைகள், இடப்பெயர்வுகள் [...]

மட்டக்களப்பு – கொழும்பு போக்குவரத்து தடைமட்டக்களப்பு – கொழும்பு போக்குவரத்து தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு – கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது. அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் [...]

வவுனியாவில் பாம்பு கடித்து குடும்பஸ்தர் பலிவவுனியாவில் பாம்பு கடித்து குடும்பஸ்தர் பலி

வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் புதன்கிழமை (27) காலை பாம்பு கடித்து குடும்பஸ்தர் மரணம் அடைந்துள்ளார். பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான 20 வயதுடைய குடும்பஸ்தரே பாம்பு கடிக்கு உள்ளாகினார். நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக [...]

150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 26, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டது. இது இன்று (நவம்பர் 27) மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு [...]

அனர்த்த நிலைமையை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்அனர்த்த நிலைமையை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இன்று (26) முதல் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த விசேட பிரிவினை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் [...]