17 வயது சிறுமி துஷ்பிரயோகம் – தனியார் வகுப்பு ஆசிரியர் கைது
பத்தாம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியான 17 வயது சிறுமியை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டு, தலைமறைவாகியிருந்த தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர், வழக்கறிஞருடன் பொலிஸ் நிலையத்தில் சரணமடைந்தபோது, புதன்கிழமை (13 ) கைது செய்யப்பட்டள்ளார் என சியம்பலாண்டுவ பொலிஸார் தெரிவத்தனர்.
முத்துகண்டிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் பணிபுரியும் இந்த 55 வயதான ஆசிரியர், சியம்பலாண்டுவ நகரில் ஒரு தனியார் வகுப்பை நடத்தி வருகிறார்.
அந்த வகுப்புக்கு வந்திருந்த மாணவியையே அந்த ஆசிரியர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதுதொடர்பில் தனது தாயாரிடம் அந்த மாணவி தெரிவித்தார். அதனையடுத்து, சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், அவர் தனது சகோதரி மற்றும் தாயுடன் வசிக்கிறார்.
சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் முயற்சித்த போதிலும், அவர் அப்பகுதியை விட்டு தப்பியோடி தலைமறைவாகி இருந்தார்.
தப்பி ஓடிய அவர், ஒரு வழக்கறிஞர் மூலம் பொலிஸாரிடம் சரணடைய வந்தபோது, அவர் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அதே நேரத்தில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
The post 17 வயது சிறுமி துஷ்பிரயோகம் – தனியார் வகுப்பு ஆசிரியர் கைது appeared first on Ra Tamil.