யாழ் போதனாவில் காவலாளியை கடித்த நபர்
Categories :
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று இன்று மாலை இடம்பெற்றது.
மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது.
35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழ் போதனாவில் காவலாளியை கடித்த நபர் appeared first on Ra Tamil.