யாழில் தவறான முடிவெடுத்த பாடசாலை மாணவன்


Categories :

யாழ்ப்பாணத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ். பெரியபுலம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த, மாணவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் free fire என்ற கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பாடசாலைக்கும் செல்லவில்லையென தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த மாணவனின் கைப்பேசியினை தந்தை பறித்துள்ளார்.

இதனால் குறித்த மாணவன் கடந்த 25 ஆம் திகதியன்று வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாணவன் பரந்தனில் உள்ள தமது வீட்டில் நின்றதாக கூறி உறவினர் ஒருவர் அவனை நேற்று முன்தினம் (02-10-2024) வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோருடன் சேர்ப்பித்தார்.

இதனையடுத்து குறித்த மாணவன் நேற்றையதினம் (03-10-2024) அதிகாலை 2 மணிவரை குறித்த கேமினை விளையாடிவிட்டு வீட்டிற்கு அருகில் இருந்த காணியில் தவறான முடிவெடுத்து

மாணவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post யாழில் தவறான முடிவெடுத்த பாடசாலை மாணவன் appeared first on Ra Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *