தொடர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
கன்னியாகுமரியில் அமையப் பெற்றுள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்கும் காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரிக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விவேகானந்தர் பாறைக்கு தனி படகுமூலம் சென்று,
அங்குள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.நேற்று இரவு ஏழு மணி அளவில் தனது தியானத்தை தொடங்கிய அவர் இன்று காலை தியானத்தில் ஈடுபட்டிருக்கும் காணொளிகளும், புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.
ஊடகத்தில் வெளியான காணொளி குறித்து இணையம் முழுவதும் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கன்னியாகுமரிக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பு அளிக்க பாஜக தலைவர்கள் யாரும் செல்லவில்லை.
இதனை அரசியல் சார்ந்த நிகழ்வாக மாற்ற வேண்டாம் என அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தி இருந்ததால் பாஜக தலைவர்கள் யாரும் பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் பங்குபற்றவில்லை என அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் உயர் பதவியில் இருக்கும் இந்திa பிரதமர் நரேந்திர மோடி.. அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று அவர் கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டிருப்பதும்,
அது தொடர்பான காணொளி இணையம் முழுவதும் பகிரப்படுவதும், அரசியல் ரீதியாக பாரிய விளைவு தேர்தலில் எதிரொலிக்கும் என்றே அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
The post தொடர் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி appeared first on Ra Tamil.