வௌ்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு


Categories :

கலாஓயா ஆற்றுப்படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (29) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இந்த நிலைமையை மிகுந்த அவதானத்துடன் கையாளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன், அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகளிலும் கிளை வீதிகளிலும் பயணிக்கும் வாகன சாரதிகள் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தனது வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வௌ்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு appeared first on Ra Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *