வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மர்ம மரணம்


Categories :

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (23.11) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற இருந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே மரணமடைந்தவராவார்.

மரணமடைந்தவரின் சடலம் சிறைக்காவலர்களால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் நீதவான் தி.திருவருள் சிறைச்சாலைக்கு சென்று சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் நடத்தியிருந்தார். அத்துடன் வவுனியா வைத்தியசாலைக்கும் சென்று சடலத்தை பார்வையிட்டார்.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் கொல்லப்பட்டரா அல்லது தவறான முடிவெடுத்து மரணித்தாரா என்ற கோணத்தில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் மர்ம மரணம் appeared first on Ra Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *