யாழ் திருநெல்வேலியில் உணவில் மட்டைத்தேள் – உணவகத்திற்கு சீல்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது.
இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட திருத்த வேலைகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது அவதானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் (27) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை நேற்றை தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000/= அபராதம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் நேற்யை தினம் சீல் வைத்து மூடப்பட்டது.
The post யாழ் திருநெல்வேலியில் உணவில் மட்டைத்தேள் – உணவகத்திற்கு சீல் appeared first on Ra Tamil.