No menu items!
No menu items!
More

    யாழ் ஊர்காவற்றுறையில் நீரிழ் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

    யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை போன்ற சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.

    11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுமிகளுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

    குறித்த சிறுமிகள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுவமிகளை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களையும் அவதானித்துள்ளனர்.

    இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும்

    உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    The post யாழ் ஊர்காவற்றுறையில் நீரிழ் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு appeared first on Ra Tamil.

    Latest articles

    spot_imgspot_img

    Related articles

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_imgspot_img