முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Categories :
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியிலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுட்டது.
சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தினார்.
The post முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு appeared first on Ra Tamil.