நெடுந்தீவுக்கான போக்குவரத்து நிறுத்தம்
Categories :
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக யாழ் வைத்தியசாலை செல்லவேண்டியவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post நெடுந்தீவுக்கான போக்குவரத்து நிறுத்தம் appeared first on Ra Tamil.