கிளிநொச்சியில் பாடசாலை மாணவி உயிரிழப்பு
Categories :
கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . நேற்று (17) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இராமநாதபுரம் பகுதியில் பிரபல ஆசிரியர் ஒருவரின் புதல்வியான விஜயகுமார் சஞ்சிகா 15 அகவையுடைய மாணவியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் மாணவியின் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post கிளிநொச்சியில் பாடசாலை மாணவி உயிரிழப்பு appeared first on Ra Tamil.