அமைச்சுக்களுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் ஏலத்தில்
Categories :
அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம் பாரிய செலவைச் சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
The post அமைச்சுக்களுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் ஏலத்தில் appeared first on Ra Tamil.