அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு
Categories :
அமெரிக்காவில் வானொலி கோபுரத்தின் மீது மோதி உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகி உள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்ட உலங்கு வானூர்தி, ஹூஸ்டன் நகரில் உள்ள வானொலி கோபுரத்தின் மீது மோதியது.
இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த உலங்கு வானூர்தி, கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததாக ஹூஸ்டன் நகர மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
The post அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு appeared first on Ra Tamil.